மோடி மே 26-ந் தேதி பிரதமராக பதவியேற்கிறார்

0

டெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அக்கட்சி உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய பட்டியலுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். 

அப்போது அக்கட்சியின் முக்கிய தலைவர்களும் உடனிருந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 10 கூட்டணி கட்சிகளும் சேர்த்து 335 எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்நாத் சிங் அளித்தார். மேலும் மோடியை ஆட்சியமைக்க அழைக்கும்படி கோரிக்கை விடுத்தார். 

பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே பேட்டியளித்த ராஜ்நாத் சிங், மோடி பதவியேற்பு விழா வரும் 26ந் தேதி நடைபெறும் என தெரிவித்தார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு 3000 பேருக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் ராஜ்நாத் கூறினார். ஜனாதிபதியின் அழைப்பை தொடர்ந்து இன்று பிற்பகல் 3.15 மணிக்கு மோடி, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது மோடியை வரும் 26ந் தேதி பிரதமராக பதவியேற்க வருமாறு அதிகாரப்பூர்வமாக முகர்ஜி அழைப்பு விடுத்தார். இதற்கான கடிதத்தையும் மோடியிடம் முகர்ஜி வழங்கினார். 

இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகை முன் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, வரும் 26ந் தேதி மாலை 6.00 மணியளவில் தான் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்தார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)