நண்டுகளில் நெடுங்கால் நண்டு, சம்பா நண்டு, தில்லை நண்டு என பல வகை உள்ளன. தில்லை நண்டு மட்டும் கடல் ஓரத்தில் அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதியில் பொந்தில் வாழக்கூடியவை. மற்ற வகை நண்டுகள் கடலில் வாழ்ந்து வருகிறது. இப்போது கோடை காலம் தொடங்கி நல்ல வெயில் அடித்து வருவதால் அலையாத்தி காடுகளை ஒட்டிய பகுதி காய்ந்து காணப்படுகிறது. கடல் ஓரமாக உள்ள அலையாத்தி காடுகளில் உள்ள தில்லை மரம் அடியில் பொந்தில் வாழக்கூடிய தில்லை நண்டுகளை நண்டு பிடிக்கும் மீனவர்கள் ஆர்வத்துடன் பிடிக்கின்றனர்.
இந்த நண்டை அனைத்து மீனவர்களும் பிடிக்க மாட்டார்கள். தில்லை நண்டை பிடிப்பதற்கு சில கிராமத்தில் உள்ள மீனவர்கள் மட்டும் அதாவது பழஞ்சூர், துவரங்குறிச்சி, செங்க படுத்தான்காடு ஆகிய பகுதிகளில் தில்லைநண்டு பிடிக்கும் மீனவர்கள் சிலர் உள்ளனர். இவர்கள் தான் தொன்றுதொட்டு தில்லை நண்டுகளை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இப்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் தில்லை நண்டுக்கு கிராம பகுதிகளில் நல்ல கிராக்கி உள்ளது.
இதுகுறித்து தில்லை நண்டு பிடிக்கும் மீனவர் சங்கர் கூறியதாவது:–
தில்லை மரத்துக்கு அடியில் வாழந்து வருவதால் இந்த நண்டிற்கு தில்லை நண்டு என்று பெயர் வந்தது. மருத்துவ குணம் உடையது. மூலச்சூட்டுக்கு அரிய வகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நண்டை பிடிப்பது மிகவும் சிரமம். சதுப்புநிலப் பகுதியில் உள்ள பொந்துக்குள் இந்த நண்டுகள் இருக்கும். நாங்கள் பொந்துக்குள் கையை விட்டு பிடிப்போம். பொந்தில் சில சமயம் பாம்புகள் இருக்கும் சில நேரங்களில் அந்த பாம்பு கடித்துவிடும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவோம். இப்போது கோடை தொடங்கி உள்ளதால் சதுப்பு நில பகுதிகளில் காய்ந்து காணப்படுவதால் அதிக அளவில் தில்லை நண்டுகளை பிடிக்கின்றோம். ஒரு பொந்தில் 4 நண்டுகள் இருக்கும் ஒரு கிலோ 75 க்கு விற்பனை செய்கிறோம். அதிக சத்துள்ளதால் கிராமப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் இந்த நண்டை வாங்கி செல்கின்றனர்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது