கடந்த 20 வருடங்களாக அதிரையில் செயல்பட்டுவரும் "பைத்துல்மால்" பல்வேறு சேவைகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது.
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 30,31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் திருக்குர்ஆன் மாநாடு நடத்துகிறது. முன்னதாக குழந்தைகள், சிறார்கள், இல்லத்தரசிகள் ஆகியோருக்கு குர்ஆன் சார்ந்த பல்வேறு போட்டிகளையும் அறிவிற்ற்துள்ளது.
இதுவரை நடந்த 13 மாநாடுகளில் பங்கேற்றதைவிட கூடுதலான பேர் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டனர். ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் சற்று கவலையையும் தந்துள்ளது.
அதாவது, சிறார், சிறுமிகளுக்கான போட்டிகளில் தேர்வானோர் மட்டுமே 925 பேர். இவையன்றி அல்குர்ஆன் அறிவமுதப் போட்டி, பேச்சுப்போட்டி, கிராஅத் போன்றவற்றிலும் பலர் பரிசுக்குரியவர்களாகத் தேர்வாகி உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
கேளிக்கை, விளையாட்டு, சினிமா, சீரியல் என்றிருந்தவர்களை கடந்த ஒருமாதமாக குர்ஆனை வாசிக்க வைத்த வகையில் பைத்துல்மாலின் இந்த நிகழ்ச்சியின் நோக்கங்கள் வெற்றி துபெற்றுள்ளன. எனினும், ஆர்வமாகக் கலந்து கொண்டவர்கள் மகிழ்வுறும்படியான பரிசுகளையும் வழங்க வேண்டும். எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக பரிசுகள் தேவை என்பதால், வெளிநாடுவாழ் அதிரை மக்களிடமிருந்து அதிரை பைத்துல்மால் பரிசுகளுக்கான ஸ்பான்சர்கள் எதிர்பார்க்கிறது.
அவ்வகையில் ஜித்தா,ரியாத்,தமாம், துபாய், அபுதாபி,குவைத் மற்றும்பிற நாடுகளிலுள்ளோர் அந்தந்த கிளை நிர்வாகிகளிடம் தங்களால் முடிந்த நன்கொடையை மனமுவந்துவழங்கி ஊக்குவிக்கும்படி பைத்துல்மால் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ளோர் என்னிடமோ அல்லது S.M.A. சாகுல் ஹமீது அவர்களிடமோ தந்தால், இன்ஷா அல்லாஹ் நாளைக்குள் அனுப்பிவிட வசதியாக இருக்கும்.
நேரடியாக அதிரை பைத்துல்மால் வங்கிக் கணக்கிற்கும் அனுப்பலாம்.
வங்கி கணக்கின் விவரம் :
அதிரை பைத்துல்மால்
C/A. No. 115-53-332 ( Current Account )
தனலக்ஷ்மி பேங்க்
அதிராம்பட்டினம் கிளை
---------------------
ADIRAI BAITHULMAL
Current Account No. 115-53-332
Dhanalkhshmi Bank
Adirampattinam Branch
குறிப்பு: அவசரம்கருதி இப்பதிவை அதிகமாக Share செய்து தங்களது நண்பர்களுக்குப் பரிந்துரைக்கவும்.
அன்புடன்,
N. ஜமாலுதீன்
ABM துபாய்கிளை செயலர்


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது