அதிரையில் நேற்று நடந்த கோர விபத்து, POLICE REPORT

0
அதிரை அருகே உள்ள எரிப்புரக்கரை .சி.ஆர் சாலையில் நேற்று பேருந்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இது குறித்து உடனுக்குடன் நம் தளத்திலும் பிற அதிரை தளங்களிலும் செய்திகள் புகைப்படத்துடன் பதிந்திருந்தோம்.

இதில் இறந்தவர்கள் பெயர் விஜய் மற்றும் விக்னேஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது

இது குறித்து அதிரை  காவல் துறையினர் அளித்த முழு விபரம் இதோ...

துக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்த சுதாகர் () ராஜசுந்தரம் (27), தர்மலிங்கம் மகன் வீரமணி கண்டன்(22). உறவினர்களான இருவரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மயிலாம் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

ஏரிப்புறக்கரை வழுதியம்மன் கோவில் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது முத்துப்பேட்டையிலிருந்து ஏர்வாடிக்கு சென்ற கேரளாவை சேர்ந்த டூரிஸ்ட் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ராஜசுந்தரம், வீரமணிகண்டன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)