அதிரை நடுத்தெருவில் அமைந்துள்ளது செட்டியா
குளம். அதிரையின் முக்கிய குளங்களில் ஒன்றான இது காடுகள் மண்டி குளம்
முழுவதும் ஆகாய தாமரை செடிகள் நிறைந்து ஒரு மினி கூவம் போல காட்சியளித்தது. இந்த பிரச்சனையை கையில் எடுத்த சகோதர வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர்களான தௌஃபீக், ஆசிப், வஹாப், சாலிஹ், முபீன் ஆகியோர்
"அதிரையில் சின்ன அமேசான் காடு" என்ற ஒரு பதிவையும் காணொளியையும்
பதிந்தனர்.
இதனை அடுத்து அதிரை பேரூராட்சி நிர்வாகம்
நடவடிக்கை எடுத்து தற்பொழுது இந்த குளத்தின் 90% சதவிகித பணிகள் நிறைவடைந்து பார்பதற்க்கு
மிகவும் எழிலுடன் காட்சியளிக்கிறது.
இந்த சேவையை செய்த
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்துக்கு அதிரை பிறையின் சார்பாக மணமார்ந்த பாராட்டுகளை
தெரிவித்துக்கொள்கிறோம்.





சிறந்த முயற்சி !
ReplyDelete