எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியை தொடர வசதியாக நடத்தப்பட உள்ளது உடனடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. இதில் 91.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் உடனடியாக தேர்வு எழுதி வெற்றி பெற்றால் இந்த ஆண்டே தங்களது உயர்கல்வியை தொடர முடியும். இதற்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் இறுதியில் நடைபெற உள்ளது. துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தவிர கூடுதலாக ரூ.50ஐ பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கென தனியாக விண்ணப்பம் எதுவும் கிடையாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது