கேன்சரை ஏற்படுத்தும் பேப்பர் கப்! ஆபத்து!

Pudhiyavan
0

மாநகராட்சி மருத்துவர் செல்வராஜ். "நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் பிஸ்பினால்-ஏ (Bisphenol -A) என்ற கெமிக்கல் இருக்கிறது. இதை அதிக அளவில் பயன்படுத்தும்போது ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அதனால்தான் இன்று எங்கு பார்த்தாலும் செயற்கை வழி கர்ப்பங்கள் பெருகி வருகின்றன.

அதுமட்டுமல்ல, 10, 11 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்படைந்து விடுகிறார்கள். கேன்சர், ஒபிஸிட்டி, தைராய்டு கோளாறு என பல நோய்களுக்கும் வாசல்படியாக இருக்கிறது இந்த பிளாஸ்டிக் பயன்பாடு. அதனால்தான் மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேஷம், டெல்லி, ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களில் டூரிஸ்ட் ஸ்பாட்டுகள், மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள்.

ஆனால், இதெல்லாம் ஏதோ பக்கத்து கிரக செய்தி என நினைத்துக் கொண்டு... பிளாஸ்டிக் கப்பில் டீ குடிக்கிறோம். ஐஸ்கிரீம், தயிர், பால், எண்ணெய், அரிசி, பருப்பு என அனைத்தும் பிளாஸ்டிக் பேக்குகளில் வாங்குகிறோம். இதையெல்லாம்விடக் கொடுமை... சுடசுடச் சாப்பாடு, சாம்பார், சூப் என்று பாலிதீன் பைகளில் பேக் செய்து சாப்பிட்டு, தூக்கி எறிந்து விட்டு வருகிறோம். ஆனால், வயிற்றுக்குள் போன அந்த சாப்பாட்டுடன் கெமிக்கலும் சேர்ந்து போயிருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறோம்''

ஐந்திணை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தமிழ்வேங்கை, "சில மாதங்களுக்கு முன் டெல்லியில் பல நூறு மாடுகள் இறந்தன; இறந்த அத்தனை மாடுகளின் வயிற்றிலும் பாலிதீன் பைகள் இருந்தன! கேட்பதற்கே எத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது? ஆடு, மாடுகள் இந்த பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், அதன் பாலில் கெமிக்கல் கலந்திருக்கிறது. அந்தப் பாலைத்தான் நாமும் குடித்துக் கொண்டு இருக்கிறோம். உச்சகட்ட கொடுமையாக தாய்ப்பாலிலும் இந்த கெமிக்கல் இருக்கிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் உருவாகும் மருத்துவ - பிளாஸ்டிக் கழிவுகள் மற்ற உலக நாடுகளைவிட அதிகம். நாம் பயன்படுத்தும் ஒரு கேரி பேக், சூரிய ஒளியால் மட்குவதற்கு 300 வருடங்கள் ஆகும் என்றால், தினம் தினம் எத்தனை மீட்டர் அளவுள்ள இந்த விஷக் குப்பையை 'ஜஸ்ட் லைக் தட்' பயன்படுத்துகிறோம்? இதற்கு மாற்றாக சணல் பைகளை பயன்படுத்தலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள், விஞ்ஞானிகள். பல நூறு வருஷங்களாக இந்த சணல் பைகளை பயன்படுத்தும் முன்னோடி சமூகம் நம்முடையது. மீண்டும் அது நம் கைகளுக்கு வரவேண்டும்'' என்று சொன்னார்.

''இதற்கு மேலும் காசு கொடுத்து நோயை வாங்க வேண்டுமா என யோசியுங்கள் - ஒவ்வொரு முறையும் பாலிதீன் பேப்பர்களில் சாப்பிடும் போதும், டீ குடிக்கும் போதும்!'' என்று பொறுப்புடன் மாநகராட்சி மருத்துவர் செல்வராஜ். எச்சரித்தார்.

முடிவு உங்கள் கையில்!


USA Chemical Research Center gives New result :

Don't drink Tea in plastic cups
Don't eat any food on  polythene paper & plates
Plastic reacts to heat and it will cause 52 types of cancers  

பிளாஸ்டிக் பற்றிய இன்னும் பல விபரங்கள் இந்த லிங்கில் உள்ளது
http://post.jagran.com/drinking-tea-in-plastic-cup-makes-you-vulnerable-to-cancer-1301388298

அருமை சகோதரர்களே !... மேற்காணும் முக்கியமான தகவலை எச்சரிக்கையை நீங்கள் படிப்பதோடு நிறுத்தி விடாமல் மற்றவர்களையும் சென்றடைய செய்யுங்கள் ..

- தக்கலை கவுஸ் முஹம்மத்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)