சுழற்கோப்பையை தட்டிச் சென்ற சிட்னி அணியினர்

0

  கடந்த 5 நாட்களாக அதிரை கிராணி மைதானத்தில் அதிரை சிட்னி அணியினர் நடத்திய சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியை நடத்தியது. இந்த தொடர்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று பகல் 3 மணியளவில் துவங்கியது . முதலில் பேட் செய்த முத்துப்பேட்டை நோ ஃபியர் அணியினர் சிறப்பாக விளையாடி 10 ஓவர்களில் 111 ரன்களை பெற்றனர்.

10 ஓவர்களில் 112 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய சிட்னி அணி முதலில் தடுமாறினாலும் அந்த அணி வீரர் நிஜார் அவர்களின் அதிரடியான அரை சதத்தால் அந்த அணியும் 10 ஓவர்களில் அதே 111 ரன்களை அடித்தது. இதன் மூலம் இந்த போட்டி சமநிலையில் முடிந்தது.

இதனை அடுத்து சூப்பர் ஓவர்  நடத்த தீர்மானிக்கப்பட்டது. முதலில் இறங்கிய அணியினர் 6 பந்துகளில் 10 ஓட்டங்கள் பெற்றனர். 6 பந்துகளில் 11 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய அதிரை சிட்னி அணியினர் 5 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தது. மீதம் 1 பந்துக்கு 5 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் சிட்னி அணியின் இடது கை மட்டையாளர் அதிரடியான சிக்சரை விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் அதிரை சிட்னி அணியினர் வெற்றிக் கோப்பையை கைப்பற்றியதுடன் முதல் பரிசான 10,014 ரூபாயை யும் பெற்றது.

இரண்டாம் பரிசு - முத்துப்பேட்டை நோ பியர்

மூன்றாம் பரிசு  - அதிரை TRIPLE - X

நான்காம் பரிசு - சிட்னி ஜூனியர் அணி 

இந்த போட்டியில் அதிரடியாக 26 பந்துகளில் 58 ரன்கள் விளாசிய சிட்னி வீரர் நிஜார் அவர்களுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தொடர் நாயகன் விருது - சதாம் (முத்துப்பேட்டை)

சிறந்த கேப்டன் - ஆசிக் (சிட்னி)

சிறந்த மட்டையாளர் - சுஹைப் (AFCC)

சிறந்த பந்துவீச்சாளர் - அபுசாலிம் (சிட்னி)

சிறந்த விக்கெட் கீப்பர் - முபாரக் (சிட்னி)

சிறந்த இளம் வீரர் - இர்ஷாத் (சிட்னி)










Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)