அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு
மற்றும் திராவிடன் மருத்துவமனை பட்டுக்கோட்டை இணைந்து நடத்தும் இலவச காது, மூக்கு,
தொண்டை மற்றும் அலர்ஜி விழிப்புணர்வு முகாம் இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00
மணி வரை நடைப்பெற்றது.
இதில் பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனையை
சேர்ந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுனர் DR.D.பிரின்ஸ் பீட்டர் தாஸ் M.S.,
(E.N.T,.) அவர்கள் கலந்துக்கொண்டு தக்க ஆலோசனை வழங்கினார்கள்.
இந்த முகாமில் காதில் சீழ் வடிதல், காது
கேளாமை, காதில் இரைச்சல், தலைச்சுற்றுவது, குரல் மாற்றம், தொண்டையில் சதை, மூக்கடைப்பு,
சைனஸ் பிரச்சனை, மூக்கில் சதை போன்ற பாதிப்புகளைக் கண்டறிய எண்டோஸ்கோபி கருவி மூலம் 250 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு
மருத்துவரிடம் அதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு
பயன் அடைந்தனர்.






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது