அதிரையில் தி.மு.க வே வெற்றி பெற்றது

4
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டஆ.தி.மு.க வேட்பாளர் பரசுராமன் வெற்றி பெற்றுள்ளார். இவர் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலுவை விட சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.

அதிரையை பொருத்தவரை  வாக்காளர்களில் மொத்தம் 14,591 வாக்குகள் பதிவாகியுள்ளன. அஃதாவது 78.8% வாக்குகள்  பதிவாகியுள்ளன. என்று தேர்தல்  அன்று நாம் வெளியிட்ட செய்தியில் பதிந்திருந்தோம்.


இந்த 14,591 வாக்குகளில் 7614 வாக்குகள் தி.மு.க வுக்கும் 4238 வாக்குகள் அ.தி.மு.க வுக்கும் கிடைத்துள்ளது. இதன் மூலம் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு அ.தி.மு.க வேட்பாளர் கு.பரசுராமன் அவர்களை விட 3376 வாக்குகள் அதிரையில் அதிகம் பெற்றுள்ளார். இதன் மூலம் தஞ்சையில் தி.மு.க வேற்றி பெறவில்லை என்றாலும் அதிரையில் பெருவாரியான வாக்குகள் தி.மு.க கட்சிக்கே விழுந்துள்ளது.

-அதிரை பிறை தேர்தல் பணிக் குழு


Post a Comment

4Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இது தேவையில்லாத கணக்கெடுப்பு திமுகாவிற்கு எந்த வகையிலும் இது உதவ போவதில்லை இதனால் ஒரு வேளை ஆளும்கட்சியரால் நமக்கு கிடைக்கவிருக்கும் சலுகைகள்தான் கிடைப்பதில் பாதிப்படையும்.

    ReplyDelete
  2. இது தேவையில்லாத கணக்கெடுப்பு திமுகாவிற்கு எந்த வகையிலும் இது உதவ போவதில்லை இதனால் ஒரு வேளை ஆளும்கட்சியரால் நமக்கு கிடைக்கவிருக்கும் சலுகைகள்தான் கிடைப்பதில் பாதிப்படையும்.

    ReplyDelete
Post a Comment