அதிரையில் குவியும் குப்பைகள்! குமுறும் குடிமக்கள்!

Irshad Bin Jahaber Ali
0
அதிரை நெசவுக்காரத் தெரு மேல்கீழ்புறம் 18வது வார்டு சாலை முழுவதும் குப்பைகளால் நிரம்பி மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இது குறித்து அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சேக் நசுருதீன் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் கூறியதாவது...

"கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சரிவர அல்லாத காரணத்தினால் இந்த சாலையே குப்பைகளால் சூழப்பட்டு உள்ளது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. புதுமனைத்தெரு, நெசவுத்தெரு, மேலத்தெரு, சி.எம்.பி.லேன் ஆகிய தெருக்களில் உள்ள குப்பைகளை இந்த சாலையில் வந்து கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இது குறித்து கவுன்சிலரிடம் சொல்லியும் எந்த பயனும் இல்லை, எனவே வேறு வழியின்றி நானே சில சமயங்களில் சுத்தம் செய்து விடுகின்றேன்" என்றார்.

நேயர்களே நீங்களே இந்த குப்பைகளை புகைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். இனி வரும் காலங்களிலாவது போது மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.




Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)