அதிரை ஸலாஹிய்யா மதர்ஸாவின் 115 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு காதிர் முகைதீன் கல்லூரி ஆடிடோரியத்தில் தீன் கல்வி கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மௌலானா மௌலவி அப்துல் காதர் ஆலிம் அவர்கள் தலைமை வகிக்க தீன் கல்வி என்னும் தலைப்பில் காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி ஹாஜா முகைதீன் காஷிஃபி அவர்களும், ஈருலகிளும் உயர்வு தரும் தீங்கல்வியின் சிறப்புகளும், முக்கியத்துவமும் என்னும் தலைப்பில் அதிரை ஸலாஹிய்யா மதர்ஸாவின் பேராசிரியர் சஃபியுல்லாஹ் அன்வரி அவர்களும், தீன்கல்வியும் நல்வழி நடந்த நமது முன்னோர்களும் என்னும் தலைப்பில் அதிரை ஸலாஹிய்யா மதர்ஸாவின் பேராசிரியர் முஹம்மது மீரான் காஷிஃபி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக அதிரை ஸலாஹிய்யா மதர்ஸாவின் மேலாளர் அஹமது கபீர் அவர்கள் நன்றியுறையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
குறிப்பு: உலமாக்கள் நம்மிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க புகைப்படம் எடுப்பது தவிர்க்கப்பட்டது.

.jpg)
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது