ஐக்கிய அரபு இராஜ்யத்தில் பல பகுதிகளில் எதிர்வரும் 48 மணிநேரத்துக்கு (வெள்ளிக்கிழமை வரை ) தூசுடன் புயல் காற்று வீசும் என ஐக்கிய அரபு ராஜ்ய வளிமண்டல மற்றும் நிலநடுக்க தேசிய மையம் NCMS அறிவித்துள்ளது.
கடந்த திங்கள் ஈரானை தக்கிய புயலை தொடர்ந்து ஐக்கிய அரபு ராஜ்யத்தில் தூசுடன் புயல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வெப்பநிலை 8 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடையும் எனவும் ஐக்கிய அரபு ராஜ்ய வளிமண்டல மற்றும் நிலநடுக்க தேசிய மையம் NCMS அறிவித்துள்ளது.
மேலும் வரும் இரு தினங்களுக்கு கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் கடல் அலை சுமார் 10அடி வரை மேலெலும்ப சாத்தியம் உள்ளதால் கடல் தொழிலில் ஈடுபடுவர்கள் கவணமாக இருக்கும் படியும், கடலில் குளிப்பதை தவிர்க்கும் படியும் அறிவுருத்தல்கள் வழங்கியுள்ளது ஐக்கிய அரபு ராஜ்ய வளிமண்டல மற்றும் நிலநடுக்க தேசிய மையம்.
இரான் தலைநகர் தெஹ்ரானை நேற்று தாக்கிய புயலால் சுமார ஐவர் வரை உயிரிழந்துள்ளனர். முப்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இரான் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட புயலில் தெஹ்ரான் நகரமே தூசுக்காடாக காட்சியளித்தது.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயலின் காரணமாக தெஹ்ரானிலிருந்து இயங்கும் சகல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது