உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண காற்பந்து போட்டி 2014 இன்று வியாழக்கிழமை தொடங்குகின்றது.பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள முதல் ஆட்டமான குழு ஏ பிரிவில், பிரேசில் – கொரேசியா அணிகள் மோதுகின்றன.இதனிடையே, நேற்று சாவோ பாவ்லோ மைதானத்தில் அதற்கான அனைத்து பாதுகாப்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டன.இந்த ஒத்திகையில் 20-கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் நூற்றுக்கும் அதிகமான தீயணைப்புப் படை வீரர்களும் இந்த ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.போட்டி நடைபெறும் போது பாதுகாப்பிற்காக சுமார் 6000 -த்திற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் லட்சக்கணக்கான காவல்துறையினர் நகர் முழுவதும் வலம் வந்து தகுந்த பாதுகாப்பு பணிகளை செய்யவுள்ளனர் என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது