முத்துப்பேட்டையில் குடிசைகள் எரிந்து சாம்பல்!

0

முத்துப்பேட்டை அடுத்த பாலாவை கிராமத்தில் நேற்று மாலை மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் காத்தமுத்து(55), காத்தலிங்கம்(52), நாகரத்தினம்(35), மீனாட்சி(48), நாகம்மாள்(62), குணசேகரன்(40), பாப்பா(62), மாரியப்பன்(50) ஆகியோரின் 8 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகின.

இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். சம்பவ இடத்திற்கு மன்னார்குடி ஆர்.டி.ஓ.சுப்பு, வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம், ஆர்.ஐ சந்தரமோகன், வி.ஏ.ஓவினர் வேளம்மாள், மாரியம்மாள் மற்றும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள நொச்சியூர் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: முத்துப்பேட்டை நியூஸ்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)