பெற்றோர் ஒப்புதலுடன் ஃபேஸ்புக்கில் வலம் வர சிறுவர்களுக்கு அனுமதி

0
13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோரிடன் ஒப்புதலுடன் ஃபேஸ்புக் கணக்கில் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம், அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையத்திடம் இதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது. அதன்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் ஃபேஸ்புக் கணக்கை தங்களது பெற்றோரின் ஒப்புதலுடன் பெறலாம்.


இதற்காக ஃபேஸ்புக்கில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. 13 வயதுக்கு உட்பட்ட பயனர்கள் தனது கணக்கை துவக்க முயற்சித்தால், அந்தப் பயனரிடம் அவர்களது பெற்றோர் வைத்திருக்கும் கணக்கு குறித்த தகவல்களை ஃபேஸ்புக் கேட்கும்.

அதன்பின், பெற்றோரின் கணக்கின் மூலம் ஒப்புதல் அளிக்கும்படியாக மின்னஞ்சல் அனுப்பப்படும். பயனருடைய வயது, பெற்றோர் விவரம் ஆகிய விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின், ஃபேஸ்புக் கணக்கை துவங்கிவிடலாம். பெற்றோரின் கணக்கு மூலம் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும்.

பின்னர், இளம் பயயருடைய கணக்கு, அவரது பெற்றோரின் கணக்குடன் இணைக்கப்படும். இதன்மூலம் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் ஃபேஸ்புக் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் பதிவேற்றம் செய்யும் தகவல்களும் வந்து சேரும்.

இதன் மூலம் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.
ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் சிறார்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளாவதாக, கடந்த ஆண்டு கடுமையான விமர்சனம் எழுந்தது கவனிக்கத்தக்கது.

EDITOR:

நமதூர் சிறுவர்கள் அதிகளவில் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். பெற்றோர்கள் அவர்களின் செயல்பாடுகளை கவனிப்பது மிகவும் அவசியமாகும்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)