அதிரையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை வழங்கிய அ.தி.மு.க வினர்

0
 அதிரையில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது. முதல் நாள் வகுப்பான இன்று அதிரை 2ம் எண் அரசு பள்ளி, அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று அதிரை நகர அ.தி.மு.க வினர் அரசால் வழங்கப்படும் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்கள்.

இதில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அ.தி.மு.க வின் அதிரை நகர துணை செயலாளர் மற்றும் கூட்டுறவு வங்கி துணை தலைவர் தமீம், அதிரை 14வது வார்டு செயலாளர் ஹாஜா, 03வது வார்டு இளைஞர் அணி செயலாளர் குமார், 18வது வார்டு நகர சிறுபாண்மை செயலாளர் அபுதாகிர், மற்றும் நகர இளைஞர் பாசரை செயலாளார் அகமது தாஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.














Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)