அதிரையில் ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

0
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. அதோடு கோழிகளும் பண்ணை மூலம் வளர்க்கப்பட்டு வருகிறது.

அதிராம்பட்டினம் அருகில் உள்ள மதுக்கூர் கீழக்குறிச்சி கிராமத்தில் கேரளா பகுதிகளிலிருந்து தலைச்சேரி வகை ஆடுகளை வாங்கி பரணி போட்டு பரணியில் ஆடுகளை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது இல்லை. பரணியிலேயே தீவனங்கள் ஆட்டுக்குரிய கோபோர் வேளிமாசல் என்கிற புல்களை தீவனமாக போட்டு ஆடுகளை வளர்த்து வருகின்றர். பரணி மூலம் ஆடு வளர்ப்பு புதிதாக உள்ளதால் அப்பகுதி மக்கள்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து கீழக்குறிச்சி பழனிவேல் சுரேஷ் கூறும்போது:– 
கேரள பகுதிகளிலிருந்து ஆடுகளை வாங்கி பரணி வளர்ப்பு முறையில் ஆடுகளை வளர்த்து வருகிறோம். ஒரு ஆடு 50 கிலோ வரைக்கும் வளரும். இந்த ஆட்டிற்கு எல்லா வகை புல்களும் கொடுக்கலாம். அதோடு ஆட்டு தீவனமும் கொடுக்கிறோம். கோபோர் வேளிமாசல் புற்களை எங்கள் தோட்டத்திலேயே வளர்க்கின்றோம். செம்மறி ஆடுகள் வளர்ப்பதை விட இந்த ஆடு வளர்ப்பது லாபகரமாக இருக்கும்.

சிறிய குட்டியிலிருந்து 6 மாதம் வரை ஆடு வளர்த்தால் 15 கிலோ எடை வரை வளரும். 1 வருடத்திற்கு 30 கிலோ எடையும், இரண்டு வருடம் 50 கிலோ எடை வரைக்கும் வளரக்கூடியது. லாபகரமான தொழில் என்பதால் இந்த ஆடுகளை வளர்க்கிறோம் என்று கூறினார்.

நன்றி: மாலைமலர்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)