மதுக்கூரில் பரபரப்பு! ஒருவர் வெட்டி கொலை!

4
பட்டுக்கோட்டை அருகே உள்ள கண்டியன்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்குமார் (38). இவர் கண்டியன்காடு ஊராட்சி அ.தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார். கண்டியன் காடு கார்த்திக் என்பவர் கொலையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.
மேலும் கொலை முயற்சி வழக்குகளும், மிரட்டல் வழக்கும் உள்ளது. இதனால் உள்ளூர் பிரமுகர்கள் இவர் மீது அதிருப்பதியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் வேல் குமார் காரில் மதுக்கூரில் உள்ள டிரைவிங் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது. இவர்கள் அனைவரும் தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக முகத்தை துணியால் மூடி இருந்தனர். அக்கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வேல்குமாரை சரமாரி வெட்டினார்கள்.

அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேல்குமாரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றினார்கள்.

அப்போது அவர் இறந்து விட்டார். அவரை கொலை செய்த கும்பல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உள்ளூர் பகை காரணமாக இக்கொலை நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் மதுக்கூர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.



செய்தி மற்றும் புகைப்படம்: பட்டுகோட்டை மாரிமுத்து ராஜா

Post a Comment

4Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
Post a Comment