முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது ராஜபக்சே அரசு தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். நகர செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்டு பேசிய மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் பேசுகையில், இலங்கையில் அப்பாவி தமிழர்களை தொடர்ந்து கொன்று குவித்து கொலை வெறி ஆட்டம் ஆடிய ராஜபக்சேயின் கொலை வெறி இன்னும் அடங்கவில்லை.
தற்பொழுது இஸ்லாமியர்களை தனியாக பிரித்து அவர்களையும் கொன்று குவிக்கும் நோக்கத்தோடு ஆட்சி செய்யும் ராஜபக்சே பற்றி யாரும் கண்டு கொள்ளாதது ஏன்?
தமிழகத்துக்கு சமீப காலத்தில் வந்த மோடி என்றைக்காவது இலங்கை தமிழர்களின் படுகொலை பற்றி பேசி இருப்பாரா? அன்று தமிழர்களையும் இன்று இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்கும் அதே ராஜபக்சேயை பற்றி எதும் பேசாமல், மோடி மௌனம் சாதிப்பது ஏன்?
தமிழன தலைவர் பிரபாகரன் தான் தமிழ் இனத்திற்கே தலைவர். ஆனால் இங்கே தமிழனுக்காக எதையும் செய்யாதவர்களை எல்லாம் தமிழனத் தலைவர் என்கிறார்கள்.
இது தான் வேடிக்கையாக உள்ளது. இஸ்லாமியர்கள் எதை செய்யதாலும் தீவிரவாதம் என்ற சொல்லும் நமது தேசம் என்றைக்கு இதனை மாற்றி கொள்ளும் என்ற தெரியவில்லை என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வீரசேகர், மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் வடுவூர் முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் கரையங்காடு சதீஸ், செல்லப்பா, பால்ராஜ், முரளி உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
நன்றி: முகைதீன் பிச்சை (முத்துப்பேட்டை நியூஸ்)
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது