ரமலான் மாதம் நெருங்கி விட்டது. நாளை முதல் நோன்பை நாம் நோற்க இருக்கிறோம்.
நமதூர் மக்களுக்கு ரமலான் மாதம் வந்துவிட்டாலே மாதம் முழுவதும் பெருநாள் தான். சஹர் செய்வது, தூங்குவது லுஹருக்கு எழுவது அமல்கள் செய்வது அஸருக்கு பிறகு நோன்பு கஞ்சி வாங்குவது இஃப்தாருக்கு தேவையான பொருட்களை வீடுகளுக்கு வாங்கிக் கொடுப்பது, நோன்பு திறந்து விட்டு இஷா வரை வீட்டிலோ நண்பர்களுடனோ ஓய்வெடுப்பது, தராவீஹ் தொழுவது என்று மாதம் முழுவதும் நாட்கள் சுமுகமாக நகரும்.
பெரியவர்களை விட இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தான் ரமலான் என்றால் உற்ச்சாகம்.
ஆனால் சில இளைஞர்கள் தராவீஹ் தொழுதுவிட்டு வீடுகளுக்கு செல்லாமல் நைட் ரவுண்ட்ஸ் என்ற பெயரில் இரவு முழுவதும் ஊரெல்லாம் சுற்றி வருகின்றனர்.
இதனால் சிறிதளவும் உபயோகம் கிடையாது. அதுமட்டுமல்லாமல் இம்மாதம் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் அதிகம் உடைவதாகவும் வீட்டு கதவுகளை இரவு நேரங்களில் சிலர் கல்லை எரிந்து விட்டு ஓடுவதாகவும் சென்ற வருடங்களில் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
சில இளைஞர்கள் மோட்டார் பைக்குகளில் இரவு நேரங்களில் பட்டுக்கோட்டைக்கு விளையாட்டுக்காக அதிவேகத்தில் சென்று தேனீர் அருந்திவிட்டு வருகின்றனர்.
சென்ற வருடம் இதனால் ஒரு சில சாலை விபத்துகள் ஏற்ப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்று நைட் ரவுன்ஸ் சென்ற சில இளைஞர்களை காகாவல்துறை யினர் கண்டித்து அனுப்பியதும் நடந்துள்ளது.
இது போன்று பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையூறு கொடுக்கும் நைட் ரவுன்ஸ் நமக்கு தேவை தானா.
ரமலான் மாதம் என்பது வருடத்திற்க்கு ஒரு முறை அல்லாஹ் நமக்கு அளிக்கும் அருட்கொடை ஆகும். பிற மாதங்களில் அல்லாஹ் நாம் செய்யும் ஒவ்வொரு நல் அமல்களுக்கும் 10 மடங்கு நண்மையை தருகிறான். ஆனால் ரமலான் மாதத்தில் மட்டும் தான் அல்லாஹ் நாம் செய்யும் ஒவ்வொரு அமலுக்கும் 70 மடங்கு நண்மைகளை தருகிறான். இப்படிப்பட்ட மேன்மையான மாதத்தில் வீனாக நைட் ரவுண்ட்ஸ் என்னும் பெயரில் இரவு நேரங்களில் ஊர் சுற்றுவது. கேரம் போர்ட் போன்ற விளையாட்டுகளில் காலத்தை கழிப்பது ஆடம்பர இஃப்தார் பார்ட்டிகளுக்கு நேரத்தை செலவிடுவது, தமாம் வசூல் என்ற பெயரில் சிறுவர்களை தராவீஹ் தொழுகை நேரத்தில் தொழுக அனுப்பாமல் வசூலுக்கு அனுப்புவது, தொலைக்காட்சிகளில் மூழ்கி கிடப்பது, பேஸ்புக்கில் நேரத்தை வீணடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம்.
இவை அனைத்தையும் இம்மாதத்தில் தவிர்த்து நம்மிடம் வருகை தந்திருக்கும் இந்த அழகிய விருந்தாளியை மகிழ்ச்சியுடன் வழியனுப்ப அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக.
இப்படிக்கு
நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது