தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அம்லா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது ஆஸ்திரேலியா அணியிடம் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா இழந்தது. அத்துடன் கேப்டனாக இருந்த ஸ்மித் சரியாக விளையாடாததால் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதனால் அடுத்த தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி கேப்டன் யார்? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டி வில்லியர்ஸ் டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான டெஸ்ட் அணி வீரர்களை இன்று அறிவித்தது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹசிம் அம்லாவை கேப்டனாக நியமித்துள்ளது. டி வில்லியர்ஸ் துணை கேப்டனாக செயல்படுவார் எனக் கூறியுள்ளது.
டெஸ்ட் அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
பீட்டர்சன், டியான் எல்கார், ஹசிம் அம்லா (கேப்டன்), டு பிளேசிஸ், டி வில்லியர்ஸ், டுமினி, ஸ்டீயான் வான் ஜைல், மேர்னே மோர்கல், பிலாண்டர், இம்ரான் தாஹிர், கைல் அப்போட், டி காக், ஸ்டெய்ன், டேன் பியட்
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை அணியுடன் ஜூலை 16-ம் தேதி முதல் 20-ந்தேதி வரை முதல் டெஸ்டிலும், 24 முதல் 28-ந்தேதி வரை 2 டெஸ்டிலும் மோதுகிறது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது