சவுதியில் போலி வெளிநாட்டு மது தொழிற்சாலை: 15 இந்தியர்கள் கைது!

Pudhiyavan
0


ரியாத் 
சவூதி அரேபியா நாட்டில் உள்ள அல்-கர்ஜ் பகுதியில் சிலர் போலி மது வகைகளை தயாரித்து, அவற்றை இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது என்ற பெயரில் சந்தைப்படுத்தி அதிக லாபம் சம்பாதித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சில வீடுகளை சோதனையிட்ட போலீசார், ஒரு வீட்டில் பிளாஸ்டிக் கேன்களில் உள்ள 'விஸ்கி'யை பாட்டில்களில் நிரப்பி மிகவும் பிரபலமான ‘கிங் ராபர்ட் II' என்ற பெயரில் தயாரித்து வந்தது தெரியவந்தது.

இந்த போலி மது தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்த 5 உள்நாட்டு ஆசாமிகளையும், அதில் பணியாற்றிய 15 இந்தியர்களையும் கைது செய்த போலீசார், அந்த கும்பலிடம் இருந்து ஏராளமான அபினையும் கைப்பற்றியுள்ளனர்.
                                                    Advertisement
AdvertisementLabels:

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)