உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Pudhiyavan
0


    பாஸ்போர்ட் உலக நாடுகளிடையே எளிதாக சென்று வர ஒரு              முக்கியமான ஆவணம். அதிலும் குறிப்பாக சில நாடுகளில்                   குடியேறி அந்த நாட்டு பாஸ்போர்டை வாங்க சிலர்                       மிகுந்த                   முயற்சி செய்கிறார்கள். இதில் அமெரிக்கா,                              ஆஸ்திரேலியா                   உட்பட பல        மேலை நாட்டு                  பாஸ்போர்ட்களுக்கு மதிப்பு                          அதிகம்                                                                 .
இவற்றை விட உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது என்பதை "குட் மேகஜின்" என்ற பிரசுரம் உலக நாடுகளிடையே விசா இன்றி அல்லது விமான நிலைய வருகை விசா மூலம் செல்லும் தகுதி எந்த நாட்டு பாஸ்போர்ட்டுக்கு அதிகம் உண்டு என்பதின் அடிப்படையில் தரப்படுத்தியுள்ளது. இதில் முதலாவதாக அதிக நாடுகளுக்கு செல்லும் தகுதி இங்கிலாந்து, பின்லாந்து, சுவீடன் நாட்டு பாஸ்போர்ட்டுகளுக்கு உண்டு . இந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 173 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். இரண்டாவதாக டென்மார்க் , ஜெர்மனி , லக்ஸம்பர்க், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன இந்த நாட்டு பிரஜைகள் 172 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 52 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது விமான நிலைய வருகை விசா மூலம் செல்லலாம்.
உலகில் மிக குறைந்த நாடுகளுக்கு செல்லும் அனுமதி உள்ளது ஆப்கானிஸ்த்தான் நாட்டு பாஸ்போர்டாகும் இதன் மூலம் 28 நாடுகளுக்கு தான் விசா இல்லாமல் செல்ல முடியும் . அதற்கு அடுத்ததாக ஈராக் பாஸ்போர்ட் உள்ளது இதன் மூலம் 31 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் அதற்கு அடுத்த நிலையில் பாக்கிஸ்தானும் சோமாலியாவும் உள்ளது இந்த நாட்டு பாஸ்போர்ட் மூலம் 32 நாடுகளுக்கு தான் விசா இல்லாமல் செல்ல முடியும்.
எந்த நாட்டு பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை கீழ்க்காணும் படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


Advertisement
source:sfrfaizur.blogspot

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)