மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் . .

0

திருச்சி தென்னூர் காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் முகம்மது நிவாஸ். இவரது நண்பர் மதுரை அய்யர்பங்களா மோனிசாநகரை சேர்ந்த திவ்யபாரதி.
இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தனர். இவர்களது நண்பரின் தாயார் பட்டுக்கோட்டையில் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சிக்கு நண்பர்கள் 6 பேருடன் திருச்சி வந்தனர். அங்கிருந்து கார் மூலம் பட்டுக்கோட்டை சென்றனர். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
காரை டிரைவர் அப்புகுட்டி ஓட்டி சென்றார்.இன்று காலை 6 மணி அளவில் கார் செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்குடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த மின் கம்பத்தில் கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி முகம்மதுநிவாஸ், திவ்யபாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் செங்கிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்த 7 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேர் உடல்கள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்துகுறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)