குவைத்தில் புனித ரமழான் "கியாமுல் லைல்" சிறப்பு நிகழ்ச்சிகள்!!!

0

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் மக்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக சிறப்பாக நடத்திய புனித ரமழான் மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இவ்வருடமும் (1435 / 2014) கீழ்க்கண்ட முறையில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...

நாள்:

17.07.2014 வியாழக்கிழமை நள்ளிரவு / வெள்ளிக்கிழமை அதிகாலை (ரமழான் பிறை 20) முதல் ரமழான் மாத கடைசி வரை...

நேரம்:
தினந்தோறும் நள்ளிரவு 11:45 மணி முதல் அதிகாலை 2:15 மணி வரை...

இடம்:
K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ர் (ரழி) பள்ளிவாசல், 
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், ஃகைத்தான், குவைத்.

நிகழ இருப்பவை:
கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை,
பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பாழிவுகள்,
மஸ்ஜிதுல் அக்ஸா விழிப்புணர்வு சிறப்புப் போட்டி,
வித்ரு தொழுகை,
திக்ரு / துஆ மஜ்லிஸ்.

தொடர் சொற்பாழிவு:
தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா பன்னூலாசிரியர் அல்ஹாஜ் அஷ்ஷைஃக் மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ ஃபாஜில் தேவ்பந்தி
பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, சேலம்

குறிப்பு:
நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்டும்.
பெண்களுக்கு தனியிட வசதி.
அனைவருக்கும் தேநீர் மற்றும் ஸஹர் உணவு.
விசாலாமான வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குவைத்தில் வசிக்கும் சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன்,தங்களின் சொந்தங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வருமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்க நிர்வாகிகள்.

பகல் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து நோன்பிருப்போம்!
இரவு முழுவதும் இறைவனை வணங்கிக் கொண்டிருப்போம்!!

லைலத்துல் கத்ரை தேடி அல்லாஹ்விடம் தவமிருப்போம்!
இறுதிப் பத்தில் இறையருளை இணைந்தே இறைஞ்சுவோம்!!


அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!

இப்படிக்கு ,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)