சைபீரியாவில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல், ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது. இயற்கை மற்றும் எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியே உலகின் கடைசி பகுதி என்றும் சமீப காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.
ஏனெனில் இங்கு கடந்த சில தினங்களுக்கும் முன்னர் 260 மீட்டர் அகலத்துடன் மிகப்பெரிய ராட்சத பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. ஆனால் இதன் ஆழம் குறித்து சரியாக தெரியவில்லை.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், திடீரென இந்தப் பள்ளம் தோன்றியது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது என்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளம் ஏற்பட காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இதன் ஆழம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.
மேலும் இப்பெரும் பள்ளத்தால் உலகத்தின் அழிவின் தொடக்கம் ஏற்பட்டுள்ளதோ? என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது