ளிலும் பல்வேறு மாணவ மாணவியர் 16 முதல் 18 வயதுடையோர் முறையான ஓட்டுநர் உரிமம் பெற இயலாத நிலையில் பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வருவதால் பல்வேறு விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவ மாணவியர் பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வரக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.
அவ்வாறு மாணவ மாணவியர் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் அவர்களின் வாகன சாவியை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரை அழைத்து உரிய அறிவுரைக்கு பின்னர் வாகனத்தை நேரில் ஒப்படைக்க வேண்டும்.
இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு அசம்பாவிதம் ஏதும் ஏற்படின் பள்ளி தலைமை ஆசிரியர்தான் முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தினகரன்
Advertisement



பள்ளி மாணவர்கள் அதிவேக பைக் பயணத்தின் மூலம் தங்கள் விளைமதிப்பல்லாத உயிருடன் விளையாடுகின்றனர். பள்ளிக்கு பைக்கில் வரும் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு செல்கின்றனர்.
ReplyDeleteஅதுமட்டுமின்றி நமதூரை பொருத்தமட்டில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட பெற்றோர்கள் மோட்டார் பைக்குகளை வாங்கி கொடுத்து விடுகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு சாலை விதிகள் தெரிவதில்லை.
பள்ளிக்கு வரும் பைக்கில் மாணவர்களால் பிற வசிதியற்ற சைக்கிளில் வரும் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
இனியாவது பைக்கில் வரும் மாணவர்கள் மீது நமதூர் பள்ளி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்