அதிரை இளைஞர்களின் பல ஆண்டுகால உயர்கல்வி கணவை நனவாக்கி அனைவருக்கும் மிகக்குறைந்த கல்வி கட்டணத்தில் கல்லூரி கல்வியை வழங்கி மிகச்சிறந்த கல்வி சேவையாற்றி வரும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி நிர்வாகத்திற்க்கு அதிரை பிறை சார்பாக அன்பான வேண்டுகோளை முன் வைக்கிறோம்.
நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி ஈ.சி.ஆர் சாலையை ஒட்டி அமைந்துள்ளது. கல்லூரியின் நுழைவு வாயிலும் ஈ.சி.ஆர் சாலை வழியாக உள்ளது. அதுமட்டுமின்றி ஜாவியால் சாலையில் கல்லூரி வாசல் ஒன்று உள்ளது. ஆனால் அது எந்நேரமும் பூட்டிய நிலையிலேயே உள்ளது.
கல்லூரி துவங்கும் போதும், கல்லூரி முடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பும் மாணவ மாணவிகள் ஈ.சி.ஆர் சாலை வழியாக உள்ள வாசல் வழியாக கூட்டமாக செல்கின்றனர்.
இதனால் அந்த நேரங்களில் கல்லூரி எதிரே உள்ள சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எந்நேரமும் வாகனங்கள் வேகமாக செல்லும் இச்சாலையில் இது போன்ற சூழல்களில் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே ஜாவியால் சாலை வழியாக உள்ள வாசல் கல்லூரி துவங்கும் நேரத்திலும் முடியும் நேரத்தில் மட்டும் திறக்கப்பட்டால் கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு, புதுமனைத்தெரு, ஆஸ்பத்திரி தெரு போன்ற பகுதிகளில் இருந்து வரும் மாணவ மாணவிகள் இந்த வாசலை பயன்படுத்திக் கொள்வார்கள்.
இதன் மூலம் ஈ.சி.ஆர் சாலையில் கல்லூரி துவங்கும் நேரத்திலும் முடியும் நேரத்தில் கூடும் கூட்டத்தினை தவிர்க்கலாம்.
எனவே கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி ஜாவியால் சாலை வழியாக உள்ள வாசலை திறக்குமாறு அதிரை பிறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது