அதிரை புதுத்தெருவை சேர்ந்தவர் சரபுதீன். தனது குடும்ப வருமானத்திற்காக டீ கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தெளலத் பேகம் ( வயது 39 ) இவருக்கு இருதயத்தில் ஏற்பட்ட கோளாறுக்காக சென்னை முகப்பேருவில் உள்ள இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனையில் இருதயத்தின் வால்வுகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதை மருத்துவரால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோளாறை 20 நாட்களுக்குள் உடனடி அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துகொள்ள வேண்டும் என மருத்துவரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூபாய் 3.50 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.
ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்தால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட
முடியாது என்பதால். தன்னார்வு தொண்டு நிறுவனமொன்று இந்த தொகையின் பகுதியை
அதாவது ரூபாய் 2 லட்சத்தை செலுத்த முன்வந்துள்ளது. மீதி 1.50 லட்சம் தொகை
அறுவை சிகிச்சைக்கு தேவைபடுவதால் இச்சகோதரி நம்முடைய உதவியை அன்புடன்
நாடியுள்ளார்.
நோன்பு பெருநாளைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொள்ள தயாராக இருக்கிறார். புனித ரமலான் மாதத்தில் உயிருக்கு போராடி வரும் இந்த ஏழை சகோதரியின் இருதய சிகிச்சைக்காக நாம் தாராளமாக உதவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.
நோன்பு பெருநாளைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொள்ள தயாராக இருக்கிறார். புனித ரமலான் மாதத்தில் உயிருக்கு போராடி வரும் இந்த ஏழை சகோதரியின் இருதய சிகிச்சைக்காக நாம் தாராளமாக உதவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.
குறிப்பு : இவரின் குடும்பத்திற்கு உதவ
எண்ணுகின்றவர்கள், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள தொளலத் பேகம் அவர்களின்
குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின்
வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால்
மூலமாகவோ அல்லது நமதூரில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
நிதி உதவி கோரி பாதிப்படைந்த குடும்பத்தினர் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம் :
A/c Name : NABEENA BEGAM
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 31940528973
தொடர்புக்கு : 0091 7402499071 ( சரபுதீன்- நோயாளியின் கணவர் )
பரிந்துரை : வழக்கறிஞர் அப்துல் முனாப்
பார்வைக்காக மருத்துவ ஆவணங்கள் :
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது