அதிரையில் தற்போது செய்திகளை ததருவதற்கான சில இணையதளங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் நமது சகோதர இணையதளமாகிய அதிரை நியூஸ்.
கடந்த சில நாட்களாக இந்த இணைய தள ஆசிரியரும் தலைமை நிர்வாகியுமான சேக்கன்னா நிஜாம் அவர்களின் பெயரில் யாரோ போலியாக ஜீமெயில் மற்றும் முகநூலில் கணக்கு திறந்து மிரட்டுவதாகவும் அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பதிவுகள் இடுவதாகவும் அதிரை நியூஸில் பதிந்திருந்தார்....
அப்பதிவு உங்கள் பார்வைக்கு
"இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரை நியூஸ் எடிட்டர் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் ஒன்று வந்தது.
சேக்கனா நிஜாம் பெயரில் போலியாக உருவாக்கிய மின்னஞ்சல் ( sekkanamnijam@gmail.com) முகவரியிலிருந்து "இனி உனக்கு ஆப்பு" என்று தலைப்பிட்டுமிரட்டல் அடங்கிய வாசகங்களை தாங்கி வந்திருந்தது நம்மை அதிர்ச்சியடைய வைத்தது.
இதுகுறித்து சேக்கனா நிஜாமை தொடர்பு கொண்டு விசாரித்ததில்... 'எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இணையத்தோடு தொடர்புடைய ஒரு சிலர் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு எனது பெயரில் நான் பயன்படுத்திவரும் புரபைல் படத்துடன் இதுபோன்ற கீழ்த்தரமான வேளைகளில் இறங்கியிருக்கின்றனர். நேற்றும் இன்றும் அதிரை நியூசில் பதிவிடும் ஒவ்வொரு செய்திகளுக்கும் எனது பெயரில் தமிழிங்கிலிஸ்ல் டைப் செய்யப்பட்ட பின்னூட்டங்களை தொடர்ந்து பதிந்து வருகின்றனர்.
போலியாக எனது ( சேக்கனா நிஜாம் ) பெயரில் பந்திந்த பின்னூட்டங்களை கீழ்கண்ட சுட்டிகளில் சென்று பார்க்கவும் : http://www.adirainews.net/2014/06/bl g-post_8109.html
http://www.adirainews.net/2014/06/blo -
post_6229.html
http://www.adirainews.net/2014/07/11.html
மேலும் எனது பெயரில் போலியாக முகநூல் ( Sakkana Nijam ) கணக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எனது முகநூல் பக்கத்தில் எனது நண்பர்கள் அறிய வேண்டும் என்பதற்காக "சமூகத்தில் தற்போது சைபர்குற்றம் அதிகரித்து வருகிற வேலையில் நன்கு அறிமுகமானவரின் பெயரில் போலியான முகநூல் ( Facebook ) துவங்கி அதில் தவறான தகவல்கள் தெரிவித்து வருவது அதிகரித்து வருகிறது.
இதில் என்னையும் அவர்கள் ( போலிகள் ) விட்டுவைக்கவில்லை" என்று ஸ்டேட்ஸ்ம் பதிந்துள்ளேன். புனித ரமலான் மாதத்தில் இது போன்ற தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் நயவஞ்சக ஆசாமிகள் உண்மையான இஸ்லாமியனாக இருக்கமுடியாது.
ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இவர்கள் போன்ற போலிகளிடம் எனது நண்பர்கள் - சகோதரர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் விலகி இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்றார். இவற்றை நாம் சாதாரணமாக எடுத்துகொள்ள இயலாது என்பதால், போலிகளிடமிருந்து அதிரை நியூஸுக்கு விடுத்த பகிரங்க மிரட்டலாக கருதவேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் எந்தவொரு ஆஷாமிகளும் ஈடுபடக்கூடாது என்றும், அதேபோல் எந்தவொரு இணையதளங்களும், சமூக அக்கறை கொண்ட நபர்களும் இதனால் பாதிப்படைய கூடாது என்பதற்காகவும் இதுகுறித்து சைபர் கிரைம் மற்றும் காவல்துறையில் ஏன் புகார் அளிக்ககூடாது ? என கடந்த இரு நாட்களாக அதிரை நியூஸ் குழுவினர் தீவிரமாக பரிசீலித்து வருகின்றோம்." என்றார். இதை அதிரை பிறையும் வண்மையாக கண்டிக்கிறது.
Advertisement



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சஹர் ரமழான் முபாரக்.
ஆசிரியர்கள் பலர் இருந்தாலும் அவர்களை நாம் மதிக்க வேண்டும், அதே நேரத்தில் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் இணையதளத்தை உருவாக்கி பல விஷயங்களை வெளி உலகுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் பல ஆசிரியர்கள் அவர்களோடு இணையதளங்களும் இன்று நம் மத்தியில் ஏராளம், அவர்களை நாம் கண்ணியப்படுத்த வேண்டும்.
போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது, போட்டி என்று வந்து விட்டால் கண்ணியமான முறையில் இருக்கணும், அதுதான் மரியாதையும் சகோதரத்துவமும்கூட.
இங்கு சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்கள் இரண்டு இணையதளங்களுக்கு பொறுப்பான ஆசிரியர் ஆவார். அவர் பெயரில் போலியான இ-மெயில் மற்றும் முகநூல் இவைகளை திறந்து அதில் அவருக்கு எதிராக வாசகங்களை எழுதி அவருக்கே அனுப்பி மிரட்டும் சில சகோதரர்கள் இருப்பதை நினைத்தால்! என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
ஒரு சமயம் சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்கள் உங்களுக்கு துரோகம் ஏதும் செய்துருந்தால் அவரிடமே நேரிடையாக கேட்கலாமே, அப்படி கேட்க உங்களுக்கு முழு உரிமை இருகின்றதே, உரிமை இருக்கும்போது இப்படி பின் பக்கம் குத்துவது எந்த வகையில் நியாயம்?
“இனி உனக்கு ஆப்பு” இந்த வாக்கியத்துக்கு எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் கொள்ளலாம். இந்த ஒரு வாக்கியத்தை வைத்தே மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளலாம்.
சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு, இந்த விஷயம் உங்களை எவ்வளவு தூரம் பாதித்து இருக்கும் என்று என்னால் உணர முடியும், காரணம் 2012களில் எனக்கு விரோதமான முறையில் ஒரு சிலர் பின்னூட்டம் இட்டத்தை என்னால் மறக்க முடியாது.
எதுவாக இருந்தாலும் இவர்களை இதோடு மன்னித்து விடுங்கள், மீண்டும் இப்படி நடக்குமேயானால்! கவலை வேண்டாம், அவர்களை யார் யார் என்று அடையாளம் காண்பது வெகு சுலபம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
அதிரை சகோதர தளத்திற்கு பிரச்சனை என்ற வந்தவுடன் ஆதரவு அளித்த அதிரை பிறை மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் குழுவிற்கு அதிரை நியூஸ் குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிதனை தெருவித்து கொள்கிறோம்.
ReplyDelete