அதிராம்பட்டினம் கடற்பகுதியில் ஆண்மைக்குறைவை குணப்படுத்தும் பூ சங்கு மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்குகின்றன!!

0


   அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஆண்மைக்குறைவை குணப்படுத்தும் பூ சங்கு மீனவர்கள் வலையில் அதிகஅளவில் சிக்குகின்றன அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பல்வேறு வகையான சங்குகள் மீனவர்கள் வலையில் அகப்படுகின்றன இதில் பூ சங்கு அதிக மருத்துவகுணம் கொண்டது. இந்த பூ சங்கு பார்ப்பதற்கு பூவைப் போன்றும் காலிப்ளவர் போன்றும் தோற்றத்துடன் காணப்படும் இதில் உள்பகுதியில் மரக்கலரில் சதை காணப்படும் இந்த சதை சமைத்துப்சாப்பிடுவதற்கு நல்ல ருசியாகவும்  மென்மையாவும் இருக்கும் மேலும் இது இடுப்புவலி ஆண்மைக்குறைவு வயிற்றுப்புண் கால்வலி உள்மூலம் வெளிமூலம் இரத்தமூலம் ஆகிய உஷ்ணசம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துகிறது என்பதால் பொதுமக்கள் இதை அதிகம் வாங்கிச்செல்கின்றனர் . இதுமட்டுமல்லாமல் இந்த சங்குகள் அழகுசாதனப்பொருட்கள் தயாரிப்பதற்கும் சுண்ணாம்பு தயாரிப்பதற்கும் இதுபயன்படுகிறது. இது கல்கத்தா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது பற்றி மீனவர் மாரிமுத்து என்பவர் கூறுகையில் இந்த சங்கு பல்வேறு  வியாதிகளைக்குணப்படுத்தும் அற்புத மருந்தாக மட்டுமல்லாமல் சமைத்துச்சாப்பிட மிகவும் ருசியாகவும் இருக்கும் இது கடலிருந்து மூன்று பாகத்தொலைவில் அதிகமாக கிடைக்கும் இந்த சங்கு வலையில் அகப்படுவது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருக்கும் இருந்தாலும் சங்குவலையில் அகப்படுவதால் வலைபிய்ந்து வலைசேதமாகிவிடுகிறது இதனால் எங்களுக்கு  இழப்பும் ஏற்பட்டுவிடுகிறது என்றார்
 

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)