தமிழர்கள் அதிக அளவில் கலந்து கொண்ட குறிப்பாக அதிரையர்களும் கலந்து கொண்ட சவூதி நாட்டவர்களால் நடத்தப்பட்ட மாபெரும் இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி தம்மாம் பகுதியில் இனிதே நடைபெற்றது.
இதில் ஹைதராபாத் கோழிபிரியானி,
நம்மூர் சம்சா, மிளகாய் பஜ்ஜி,
வட இந்தியா லட்டு, பேரிச்சை, வாழைப்பழம்,ஆரஞ்ச் பழம்
பாதாம்,பிஸ்தா,கடலை,முந்திரி,
குளிர்பானம்,தண்ணீர் பாட்டில்,தயிர் பாட்டில்,சாக்லெட்
இறுதியாக ஏலக்காய் டீ பொன்ற உணவுப் பொருள்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி வழங்கினார்கள்.
கலந்து கொண்ட அனைவரும் வயிறும்,மனதும் நிறைந்து ஏற்பாட்டாளர்களை வாழ்த்திவிட்டுசென்றார்கள்.
இது வருடா வருடம் ரமலான் வெள்ளிக்கிழமைதோறும் அல் மஜூரேயாவில் உள்ள இதை நடத்தும் சவூதி நபரின் வீட்டு உள் மைதானத்தில் நடைபெறுகிறது.
கோடிக்கணக்கில் பணம் இருந்தும் இன்னும் இன்னும் சம்பாரிக்க நினைக்கும் உலகில்,
நன்மையை நாடி மட்டும் இது போன்ற ஒன்று கூடலைநடத்தும்
அந்த முகம் தெரியாத சவூதி நாட்டு
நல் மனிதருக்காகவும், அவர் குடும்பத்திற்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவதோடு பாராட்டவும் செய்வோமே....!!!!
-அதிரை உபயா
-அதிரை உபயா
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது