வைத்தியரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய
சம்பவம். இந்த பெண்ணின் பெயர் ஹனின் அப்து. இவள் பாலஸ்தீன நகரில் இஸ்ரேல் விமான ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட
பெண்மணி . இந்த தாக்குதலில்
இவளது வீடு முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த
டாக்டர் இந்த பெண்மணி பற்றி என்ன சொல்கிறார் : இந்த பெண்மணி விமான ஏவுகணை தாக்குதலினால் இவளது கையின்
மணிக்கட்டில் ஏற்ப்பட்ட எலும்பு முறிவு மற்றும் தசைக்கிழிப்பு போன்ற கடுமையான
வலியினால் ஆன காயங்களின் காரணமாக எங்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், இவள் வலியை தாங்கிக்கொண்டு மன
உறுதியுடன் இருந்ததால் அழாமல் இருந்தாள். அவளது கையில் அதிகமான இரத்தம் வெளியேறிக்கொண்டே இருந்தாலும்
வலியை பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.அவ்வாறு இருந்த அந்த சிறுமியின் தைரியமும், துணிவும என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவ்வாறு இருந்த அந்த சிறுமிக்கு நான் சிகிச்சை அளிக்க அவளை நெருங்கிய போது நான்
அதிர்ந்து போய்விட்டென்... அவ்வாறு நான் அதிர்ந்து போனதற்கு காரணம் என்ன
தெரியுமா??வலி மறுக்கும் மயக்க
ஊசியுடன் அவளை நான் நெருங்கியதே!!
மயக்க ஊசியுடன் அவளை நெருங்கியவுடன் உரக்க சத்தத்துடன் அவள் சொன்ன வார்த்தை, "இதை மட்டும் எனக்குப் பயன்படுத்த வேண்டாம், இதனால்
எனது நோன்பு முறிந்துவிடும்" என்பதே.!!
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹ் இந்த பெண்மணியையும்
இவளது தாய் தகப்பனையும்
மேன்மைபடுத்தி வைப்பானாக....
இவள் போன்ற நல்ல ஈமான் உள்ள
மனிதர்களுக்கு இம்மையிலும்
மறுமை வாழ்க்கையிலும் சிறப்பான
அந்தஸ்த்தை தந்தருள்வானாக...
... அதிரை சாலிஹ்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது