அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கின்றனரா என்று கடலோர பாதுகாப்பு குழுமம், மீன் துறை ஆய்வு செய்தது.
தஞ்சை கடல் பகுதியில் சில விசைபடகுகள் இரட்டை மடி, சுருக்கு மடி, ரேஸ்மடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக மீன்துறைக்கும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கும் தகவல் வந்தது.
இதன்பேரில் நேற்று முன்தினம் இரவு அதிராம்பட்டினத்திலிருந்து கட்டுமாவடி வரை கடலில் கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் ஆனந்த், எஸ்ஐ முத்துக்குமார், எஸ்ஐ வில்வநாதன், சிறப்பு எஸ்ஐ சீனிவாசன் மீன்துறை ஆய்வாளர் கதிரேசன், உதவி ஆய்வாளர் ஆனந்த் மற்றும் மீன்துறை ஊழியர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 30க் கும் மேற்பட்ட படகுகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் தடை செய்யப்பட்ட வலை களை யாரும் பயன்படுத்தவில்லை.
-dinakaran
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது