Dr.Pirai-நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்!

Unknown
0

நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்!

03-mango-600
கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, அன்னாசி போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால்  அது மாம்பழம் தான். அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம். மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு  தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.

மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும்  பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் ரத்தக் குழாய்களில் தங்கி, உயர் ரத்த  அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். ரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு  நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாங்காய் அமிலத்தன்மை  கொண்டது.
இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற 
Mango-Fruit
வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த ரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும்.  மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத் துச்  சாப்பிட்டால் பசி ஏற்படும்.
குமட்டல் நீங்கும். மாம்பழத்தில் வைட்டமின் அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் (ஏ)(A) மிகவும் அவசியமாகும். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை பெறலாம்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)