புனேயில் தனியாக செல்லும்
பெண்களின் பாதுகாப்புக்காக
செல்போனில் புதிய வசதி வருகிற 15–
ந்தேதி முதல் அறிமுகம் செய்யப்பட
உள்ளது.
பெண்கள் பாதுகாப்பு
நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக
அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் புனேயில் தனியாக
செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக
காவல்துறை சார்பில் செல்போனில்
புதிய வசதி(அண்ட்ராய்டு மொபைல்
அப்ளிகேஷன்) அறிமுகம் செய்யப்பட
உள்ளது.
இது குறித்து புனே போக்குவரத்து கூடுதல்
போலீஸ் கமிஷனர் விஸ்வாஸ்
பந்தாரே கூறியதாவது:–
செல்போன் பயன்பாடு
தனியாக செல்லும் பெண்களுக்கு சமூக
விரோதிகளால் பாலியல்
தொல்லை ஏற்பட்டாலோ அல்லது கேலி,
கிண்டல்
செய்யப்பட்டாலோ அவர்களை காப்பாற்றும்
வகையில் செல்போனில் புதிய
வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக நள்ளிரவு நேரத்தில்
தனியாக செல்லும்
பெண்களுக்காகவே இந்த செல்போன்
பயன்பாடு சிறப்பாக
வடிவமைக்கப்பட்டு உள்ளது.
புனேயில்
போக்குவரத்துத்துறை ஏற்கனவே வெளியிட்ட
போக்குவரத்து விவரங்கள் குறித்த
பயன்பாட்டின் வெற்றியை அடுத்து,
பெண்கள் பாதுகாப்புக்கான இந்த
பயன்பாடு உருவாக்கப்பட்டது. இந்த
புதிய வசதி வரும் 15–
ந்தேதி அறிமுகப்படுத்தப்படும்.
5 பேருக்கு எஸ்.எம்.எஸ்.
இந்த புதிய பயன்பாட்டை பெண்கள்
ஆகஸ்டு 15–ந்தேதிக்கு பிறகு தங்கள்
ஆண்டராய்டு செல்போன்களில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பின்னர் அவர்கள் அந்த பயன்பாட்டில்
தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும்
நண்பர்கள் 5 பேரின் செல்போன்
எண்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.
ஆபத்து நேரிடும் சமயங்களில் தங்கள்
தொடுதிரை செல்போனில் 2
முறை அழுத்தமாக தடவ(ஸ்வைப்
செய்தல்) வேண்டும்.
செல்போனை தடவிய அடுத்த
வினாடிகளிலேயே காவல்துறை கட்டுப்பாட்டு அறை மற்றும்
அவர்கள் பயன்பாட்டில் பதிவு செய்த
அனைத்து நண்பர்கள் மற்றும்
குடும்பத்தினருக்கு எஸ்.எம்.எஸ்.
சென்றுவிடும். அந்த எஸ்.எம்.எஸ்.சில்
ஆபத்தில் உள்ள பெண்கள் இருக்கும்
இடம் குறித்த விவரமும்
சென்று விடும். இவ்வாறு அவர்
கூறினார்.
தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக செல்போனில் புதிய வசதி !
7:40:00 PM
0
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது