அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'அம்மா பரிசு பெட்டகம்'

0

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும்
ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய்
மதிப்புடைய "அம்மா குழந்தை நல
பரிசு பெட்டகம்", வழங்கப்படும் என
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான
அறிவிப்பை விதி 110-ன் கீழ் வாசித்த
முதல்வர்: ""அம்மா குழந்தை நல
பரிசு பெட்டகம்",
குழந்தையை பாதுகாப்பாக
பராமரிப்பதற்குத் தேவையான
பராமரிப்புத் துண்டு, குழந்தை உடை,
குழந்தை படுக்கை,
குழந்தை பாதுகாப்பு வலை,
குழந்தை நாப்கின், 100 மில்லி லிட்டர்
அளவு கொண்ட எண்ணெய் டப்பா,
பிளாஸ்டிக் குப்பியில் 60
மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புப்
பெட்டி, சோப்பு, நக வெட்டி,
கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான
கைகளுடன் குழந்தையை பராமரிக்க
பிளாஸ்டிக் டப்பாவில் 250
மில்லி லிட்டர் அளவு கை கழுவும்
திரவம் ஆகியன இருக்கும்.
பிரசவித்த தாய்க்கு 100 கிராம்
எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின்
ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,
தாய்ப்பாலை அதிகரிக்கவும்
‘சௌபாக்கியா’ சுண்டிலேகியம், தாய்
மற்றும் பச்சிளம் குழந்தையைப்
பராமரிக்க தேவையான
பொருட்களை வைத்துக் கொள்ள
ஒரு பெட்டகம் என 16
பொருட்களை உள்ளடக்கியதாகும்.
நடப்பு ஆண்டில் இத்திட்டத்திற்கு 67
கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
இதனால் 6.7 லட்சம் குழந்தைகள் பயன்
பெறுவர்" என்றார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)