Dr.Pirai- தாய்பால் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்

0
உலகத்தில் இடத்துக்கு இடம் மாறுபட்ட உணவுகளை உட்கொள்கிறோம் .

(கோதுமை , அரிசி ,கிழங்கு) ஆனால் உலகம் முழுவதும் ஒரு மனதாக எல்லோரும் ஏற்றுக்கொண்டு கொண்டு உட்கொள்ளும் ஒரே உணவு தாய் குழந்தைக்கு ஊட்டும் தாய் பால் மட்டும் தான். அது நிச்சயமாக அதிசய உணவு. 

திருமணமான எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது.

மேலை நாடுகளின் பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர விரும்புவதில்லை.

இதேபோல் இந்தியாவில் உள்ள இளம் தாய்மார்களும் உண்மை புரியாமல் அழகு கெட்டுவிடும் என்று நினைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை சில வாரங்களிலேயே நிறுத்தி விடுகின்றனர் என்பது வேதனைக்குறிய விஷயம்.

தாய்ப்பால் அளிப்பது வரம் அதற்குக் கொடுப்பினை வேண்டும். எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்தப்பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப் படுத்துகின்றனர்.

குழந்தைகளுக்கு 1வருடம் முதல் 2வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலுக்கு நிகர் வேறு உணவில்லை.

 ஒரு தாய் அன்போடு குழந்தைக்கு பால் தரும் போது முன்று வகையான நன்மைகள் ஏற்படுகின்றன.

1 )தாய்க்கு பல நன்மைகளும் 

2)குழந்தைக்கு பல
நன்மைகளும்

 3 )இருவருக்கும்
சேர்த்து பல நன்மைகளும்

தாய்க்கு கிடைக்கும் நண்மைகளை நாளைய பதிவில் காண்போம்
ஏற்படுகின்றன.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)