![]() |
| மாவட்ட அளவிலான போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது |
அதிரை காதிர் முகைதீன்
ஆண்கள் பள்ளியில் இன்று மாலை 4 மணியளவில் ஆசிரியர் தின
விழா மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைப்பெற்றது.
நிகழ்ச்சி தொகுப்பு:
வரவேற்புரை: டாக்டர்.
ஆ.அஜ்முதீன் (முதுகலை தமிழாசிரியர்)
முன்னிலை: ஹாஜி.டாக்டர்
எ.ஜலால் (காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர்)
தலைமை: ஹாஜி.ஏ.மக்பூப் அலி
(பள்ளி தலைமையாசியர்)
வாழ்த்துரை: ஜனாப்
ஏ.இப்ராஹிம் அன்சாரி ( அதிரை நிருபர் ஆசிரியர்)
ஜனாப். எஸ்.எம்.நூர்
முஹம்மது (முன்னால் மாணவர்)
சிறப்புரை:
திரு.கோவி.தாமரைச்சாவ் செல்வன் (தலைமையாசியர்,ஊ.ஒ.தொ. பள்ளி)
நன்றியுரை: ஜனாப்.உமர்
பாருக் (தமிழாசிரியர்)
இதில் மாவட்ட அளவிலான
விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முன்னால்
தலைமையாசிர் S.K.M
ஹாஜா முகைதீன் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற முன்னால் விளையாட்டு ஆசிரியர் திரு.ராமசந்திரன் ஆகியோர் பரிசு பொருட்களை வழங்கினார்.
மேலும் இதில் பள்ளியின் நீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க பழஞ்சூர் செல்வம் அவர்கள் வழங்கிய நிதி உதவியை அதிரை சேர்மன் அஸ்லம், தி.மு.க நகர செயலாளர் இராம.குணசேகரன் மற்றும் அதிரை காங்கிரஸ் நகர செயலாளர் M.M.S.அப்துல் கரீம் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார்கள்.
இதில் சிறப்பு
அழைப்பாளர்கள் முன்னால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள்
பலர் கலந்துகொண்டனர்.
![]() |
| நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் மாணவ கண்மணிகள் |
![]() |
| பள்ளி முன்னால் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது |
![]() |
| பள்ளி இன்னால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது |








1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது