இறால் மலாய் குழம்பு.
பலருக்கு இறால் மிகவும் பிடிக்கும். பெரும்பாலானோர் இறாலை வறுவல் போன்று செய்து சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதனை குழம்பு போன்று செய்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். அதிலும் பெங்காலியில் பிரபலமான இறால் மலாய் குழம்பாக செய்து சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இங்கு அந்த இறால் மலாய் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
இறால் - 1 கிலோ (சுத்தம் செய்தது)
வெங்காயம் - 1 + 1 (நறுக்கியது மற்றும் பேஸ்ட் செய்தது)
பூண்டு - 8 (பேஸ்ட் செய்தது)
பச்சை மிளகாய் - 2 + 6 (நீளமாக கீறியது மற்றும் பேஸ்ட் செய்தது)
பூண்டு - 8 (பேஸ்ட் செய்தது)
பச்சை மிளகாய் - 2 + 6 (நீளமாக கீறியது மற்றும் பேஸ்ட் செய்தது)
தேங்காய் பால் - 1 கப்
கடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சுத்தம் செய்யப்பட்ட இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து பேஸ்ட் செய்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் கடுகு பேஸ்ட், சிறிது உப்பு சேர்தது கிளறி, மீண்டும் குறைவான தீயில் 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். இறுதியில் தேங்காய் பால் ஊற்றி, 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, 7-8 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், இறால் மலாய் குழம்பு ரெடி!!!
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது