பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட குழுவிளையாட்டு போட்டிகள் கரம்பயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (02.09.2014, 03.09.2014) செவ்வாய்,புதன் ஆகிய இருதினங்கள் நடைபெற்றது. பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் ஜுனியர் பிரிவு, சீனியர் பிரிவு, சூப்பர் சீனியர் பிரிவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இப்பள்ளி வரலாற்றில் முதல் முறையாக மூன்று பிரிவிலும் மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பள்ளி மாணவர்கள் குறுவட்ட தடகளப் போட்டியில் 65 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர் இதில் பி.முத்துராசு (ஜுனியர்), எம் முகம்மது ஆசிப் சூப்பர் சீனியர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர், உதவி தலைமமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினார்கள்.
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது