பட்டுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

0
 பட்டுக்கோட்டையில் வழக்கறிஞர் வீட்டை தாக்கியவர்கள் மீது காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்ககோரி வக்கீல் சங்கத்தினர் நீதிமன்ற
 புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர்கள் வையாபுரி, ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் சங்க வழக்கறிஞர் முரளிகணேஷ் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டிப்பது. காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் (இன்று) நேற்று முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

மேலும் இது தொடர்பாக தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு வழக்கறிஞர் சங்கங்களை நீதிமன்ற பணிப்புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தர கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு தீர்மானத்தின்படி நேற்று பட்டுக்கோட்டை வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய 4 நீதிமன்றங்களில் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. 

இன்றும், நாளையும் நீதி மன்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)