உலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு!

Irshad Bin Jahaber Ali
0
ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான சிட்னி மார்னிங் ஹெரால்டு உலக அளவில் விமான கட்டணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தது. அவற்றின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. 


அதில், உலகிலேயே மிகவும் குறைந்த விமான கட்டணத்தில் பயணம் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 

மலேசியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பி்டுகையில் இந்தியாவில் 100 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்ய வெறும் 10.36 டாலர்களே செலவாகிறது. ஆனால், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளில் இதே 100 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கு 139.90 டாலர்கள் வரை செலவாகின்றன. அதிக விமான கட்டணம் உள்ள நாடுகள் பட்டியலில் லிதுவானியா, ஆஸ்திரியா, எஸ்டோனியா போன்ற நாடுகள் உள்ளன. 

இந்தியாவைப் போலவே தென் ஆப்பிரிக்காவிலும் விமா
ன கட்டணம் மிகக்குறைவாக உள்ளது. அங்கு 100 கி.மீ பயணம் செய்ய 11.63 டாலர்கள் மட்டுமே செலவாகின்றன. அதே போல் அங்கு ரெயில்களில் பயணம் செய்யவும் 100 கி.மீ தூரத்திற்கு வெறும் 1.88 டாலர்கள் மட்டுமே செலவாகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான கட்டணமாகும்.


எனினும், இந்தியாவில் சமீபகாலமாக ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் வகையில் ரூ.100, ரூ.500 என கட்டண சலுகையை அவ்வபோது அள்ளி வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)