ஒவ்வொரு ஆண்டும் முத்துபேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சதி திட்டம் தீட்டி மதக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், இந்து முன்னணி மற்றும் பிஜேபி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கு தகுந்தாற்போல் இரவு நேரங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்க கூடிய பகுதிக்குள் ஊர்வலம் நடத்தி வன்முறையை தூண்டி வருகின்றனர். ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளின் மீது கற்களை வீசுவதும், ஆபாசமான முறையில் நடந்துகொண்டு, மத வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வன்முறை நடவடிக்கைகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
இந்த கலவர கும்பலலுக்கு தலைமை ஏற்று நடத்திவருபவர் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு என்ற முருகனாந்தத்தம் ஆவார்.
ஆகவே கருப்பு முருகானந்தம் தலைமையில் வன்முறையை நிகழ்த்தும் சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, முத்துபேட்டையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டி, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் திருவாரூர் மாவட்ட தலைவர் M.A.லத்தீப், மாவட்ட பொதுச் செயலாளர் நைனா முஹம்மது, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் குழு புகார் மனுவினை அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கையினை மேற்க்கொள்வதாக உறுதியளித்தார்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது