அதிரை TNTJ வின் கூட்டு குர்பானி திட்டம் அறிவிப்பு!

0

ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம் பங்கு ஒன்றுக்கு 1200 ரூபாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களுடன் நங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டு சேர்ந்தோம் அறிவிப்பாளர்  ஜாபிர் (ரலி )நூல் முஸ்லீம் 2325

நாங்கள் நபி (ஸல் ) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஓர் ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம் அறிவிப்பாளர் :இப்னு அப்பாஸ் (ரலி ) நூல் திர்மீதி 1421 நசாயி 4319 இப்னுமாஜா 3122 குர்பானி தோல் மூலம் ஏழைகள் நலம் நாடுவீர் !!
ஒர் ஒட்டகத்தை குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல் ) அவர்கள் ஒப்படைத்தார்கள் .அதன் மாமிசத்தையும் ,தோலையும் அதன்மீது கிடந்த (கயிறு ,சேணம் போன்ற )வை களையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்கு கூலியாக அதில் எதனையும் வழங்கக்கூடாது என்றும் எனக்கு கட்டளை இட்டார்கள் .அதன் கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம் அறிவிப்பாளர் :அலி (ரலி )நூல் புகாரி 1710 முஸ்லீம் 2320 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை வருடம் தோறும் குர்பானி தோல்களை வசூல் செய்து ஏழைகள் முன்னேறும் வகையில் தையல் இயந்திரம்  கிரைண்டர் ,போன்ற பொருட்களும் ,கல்வி உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளும் அதிரையில் உள்ள ஏழைகளுக்கு வழங்கி வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . காலம் முழுவதும் வசூலில் நடைபெறும் மதரசாக்களும் ,குறிப்பிட்ட ஒரு சிலரும் தோலை வாரிசெல்வதால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர் .உங்கள் குர்பானி தோல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் வழங்கி ஏழைகளுக்கு அதன் பயனை வழங்கிடுவீர் குறிப்பு :குர்பானி தோல் விற்ற பணத்தில் ஐந்து பைசா கூட இயக்க வளர்ச்சிக்கோ வேறு எந்த பணிகளுக்கோ செலவிடபடாது என்று உறுதிக் கூறுகிறோம் உங்கள் குர்பானி தோல்களையும் பங்கினையும் தருவதற்கு தொடர்பு கொள்ள

செல் :
9597128886
8015379211
9629533887
9500821430
9629115317
9952596270
9944824510

நீங்கள் போன் செய்தால் ,வீடு தேடி வந்து குர்பானி தோல்களை பெற்றுக்கொள்வோம்.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)