பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. சென்னையில் வரிகள் உள்பட லிட்டருக்கு ரூ.1.28 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது. அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வரை டீசல் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்த 2013, ஜனவரியில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதனால் எண்ணெய் நிறுவனங்கள், இழப்பு ஈடுகட்டப்பட்டு லாபம் ஈட்ட தொடங்கியுள்ளன. இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வாட் வரிகளுடன் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1.21 குறைந்து ரூ.66.65 ஆக இருக்கும். சென்னையில் ரூ.1.28 குறைந்து ரூ.69.59 ஆக இருக்கும். இதுபோல், டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது