அதிரையில் சமுக ஒற்றுமையை ஏற்படுத்திய ஈத் மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ! (காணொளி இணைப்பு) !

0

தியாக திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமய சகோதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சமூக நல்லிணக்க ஒற்றுமைக்காக அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (12-10-2014) அன்று  பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மெளலவி M.A.முஹம்மத் இத்ரீஸ் M.A.,M.Phil,DFA,DFU,(தலைவர் & விரிவுரையாளர் -அரபித்துறை, கா.மு.கல்லூரி) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் .ஜனாப் S.K.M..ஹாஜா முகைதீன்,M.A.,B.Sc.,B.T, (தலைமை ஆசிரியர் ஓய்வு) கா.மு.ஆ .மேல்நிலை பள்ளி அவர்கள் தலைமை தாங்கினார்கள் .இதில் அதிரை மஹல்லாக்களின் தலைவர்கள் முன்னிலை தாங்கினார்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  திருமிகு K.இராமநாதன்,M.L. (உதவி அமர்வு நீதிபதி -அரசு இணை செயலாளர் சட்டத்துறை -சென்னை) ,ஜனாப் டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது ,துணைத்தலைவர் ,இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT)-சென்னை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் .இதில் மாற்று மத சகோதர்கள் இஸ்லாம் சம்மந்தமான கேள்விகளுக்கு டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் பதில் அளித்தார் .இந்நிகழ்ச்சியில் ஜனாப் M.ஹாஜா முகைதீன் M.SC.M.Phil, அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள் . 

இந்த நிகழ்ச்சியின் காணொளி இரண்டு பாகங்கள் இணைக்க பட்டு உள்ளது .மீதம் உள்ளவை விரைவில் பதியப்படும்.




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)