பெருமை !

0


தற்பெருமை கொள்ளல்
தனதான நாசம்
பெருமை கொள்ளல்
தனக்கான நேசம் 

எல்லாமும் நலமோடு
ஏகயிறைவன் நம்மை
படைத்ததையெண்ணி
பெருமைப்பட்டுக்கொள் 

ஏற்றத்தாழ்வு வாழ்வினில்
ஏதேனும் ஒன்று
ஏற்றமிருந்தாலும்
பெருமைப்பட்டுக்கொள்
  
புகழ்ச்சியற்ற     
புகழாரம் கிடைக்கும் தருணம்
புன்னகையோடு
பெருமைப்பட்டுக்கொள்

உன்னத அன்பு
உனைதேடி அடைந்தால்
உணர்வுகள் உருக
ஒரு சொட்டு கண்ணீர்விட்டு  பெருமைப்பட்டுக்கொள்

என்னால் மட்டுமே முடியுமென்ற
இறுமாப்பு கலைந்து
என்னாலும் முடியுமென்ற நம்பிக்கை   
உன்னக்குள்  உண்டெனில்     பெருமைப்பட்டுக்கொள்

யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள்
எளிதில் உன்னை வந்தடைந்தால் 
உனது திறமை எண்ணி
உளமார    பெருமைபட்டுக்கொள்

கொஞ்சம் அழகோடு
நிறைந்த மனதோடு
விட்டுக்கொடுத்து வாழும்
வாழ்க்கைத்துணை அமைந்தால்
மனதார  பெருமைப்பட்டுக்கொள்
      
உப்பு புளி காரம் சேர்த்து
அழகுற சமைத்து
உன்னவர்  ருசித்துண்பதோடு
உனை பாராட்டும்போது
உள்ளுக்குள் தட்டிகொடுத்து
பெருமைபட்டுக்கொள்

பிறப்பை எண்ணி   
வாழ்வை எண்ணி
இயற்கையெண்ணி   
எல்லாத்தையும்விட
எல்லாமுமான நம்மை  படைத்ததை எண்ணி
படைத்தவனை எண்ணி பெருமைப்பட்டுக்கொள்

தற் பெருமைகொள்வதிலிருந்து
தவிர்ந்துகொள்

பெருமை படுவதில்
பெருமைபட்டுக்கொள்...


ஆக்கம்: மலிக்கா

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)