மனதை வருடிய செய்தி !!!

0
 ஐதராபாத்தைச் சேர்ந்த 10வயது சிறுவன், இன்று ஒருநாள் மட்டும் அந்நகரத்தின் போலீஸ் கமிஷனராகபதவி வகிக்கிறான். தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த 10வயது சிறுவன் சாதிக்.

உடல்நலக்குறைவு காரணமாக இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவான் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தனது உறவினர்களைப் போல தான் ஒரு போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பதே சாதிக்கின் விருப்பம் என கூறப்படுகிறது. சாதிக்கின் இந்த விருப்பம் மேக் எ விஷ் பவுண்டேஷன்
அமைப்பின் மூலம் ஐதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று ஒருநாள் சாதிக்கை போலீஸ் கமிஷனராக்கி,அவனது விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார் மகேந்தர் ரெட்டி. போலீஸ் உடை அணிந்து வந்த சாதிக்கை, மகேந்தர் ரெட்டி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சல்யூட் அடித்து வரவேற்றனர். பின்னர் ரவுடிகளை துரத்திச்
சென்று பிடிப்பது தனக்கு மிகவும் தனது ஆவலை வெளியிட்டுள்ளான் சிறுவன் சாதிக்.

இதுகுறித்து மகேந்தர் ரெட்டி கூறுகையில், சிறுவனின் ஆசையை நிறைவேற்றியதில் தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)